உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகும் தஜிகிஸ்தான்!

உலக செய்திகள் 14 நிமிடங்கள் முன்
102 பார்வைகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) விலகுவதற்கு தஜிகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தஜிகிஸ்தானின் இந்தத் தீர்மானம் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு கவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுமாறு அமெரிக்கா நாடுகளிடம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நான்காவது நாடாக தஜிகிஸ்தான் மாறியுள்ளது.

இதற்கு முன்னர் வெனிசுவேலா, சாட் மற்றும் நவூரு ஆகிய நாடுகளும் குறித்த நீதிமன்றத்திலிருந்து விலகுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

இதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதற்கான அடிப்படையான ரோம் பிரகடனத்திலிருந்து தஜிகிஸ்தான் விலகுவது 2027 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்தபோது, அவரைக் கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அந்நாடு இணங்கிச் செயற்படவில்லை என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தது.

யுக்ரைனில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைக் கைது செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள பின்னணியிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் அமெரிக்காவின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமைவதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், அதன் செயற்பாடுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது.

தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் 125 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ள நிலையில், அவற்றில் ஏழு நாடுகள் விலகுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்புரிமையைப் பெற்றிருக்காத நாடுகளாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

‘ஷேக் ஹசீனாவுக்கு செக்’ : பங்களாதேஷ் திரும்பினால் கைது!

இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்குத் திரும்பினால், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என அந்த நாட்டு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஷமா ஒபைத்…

90 0 0
உலக செய்திகள்

இஸ்ரேலில் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவு

இஸ்ரேலின் காபந்துப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசியல் போட்டியாளரான காடி ஐசன்கோட் ஆகியோரின் கட்சிகளுக்கு இடையிலான புதிய சுற்றுக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், எவ்வித இணக்கப்பாடுமின்றி…

138 0 0
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் தீவிபத்திற்கு உள்ளான தொழிற்சாலையில் இருந்து 24 சட@லங்கள் மீட்பு!

ஜாவாவில் தீ விபத்தால் அழிந்த ஒரு தொழிற்சாலையில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை (22) இந்தோனேசிய காவல்துறை 24 சடலங்களை அகற்றியது.  ஒரு நாள் முன்னதாக, கட்டிடம் முழுவதும் தீ…

148 0 0
உலக செய்திகள்

உடன்பாட்டை எட்டத் தவறினால் புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறினால், புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை நடத்தத் தாம் நாட்டம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

141 0 0