உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனுபவம் இல்லாதவர்களே ஆட்சியில்.!

இலங்கை செய்திகள் 25 நிமிடங்கள் முன்
104 பார்வைகள்

“நாட்டை நிர்வகிக்கும் அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, நீதித்துறையின் சுதந்திரமும் சட்டத்தின் ஆட்சியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபோதிலும், நாட்டை நிர்வகிக்கத் தெரியாதவர்களே பதவிகளில் உள்ளனர். பல ஆண்டுகளாகச் சேர்க்க முடியாத பணத்தை இப்போது அவசரமாகச் சேகரிக்கும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன. வாழ்க்கைச் செலவால் சாதாரண மக்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், ஆதரவளித்த தொழிற்சங்கங்களும் இப்போது எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன. அவற்றிற்கு எமது கட்சி முழுமையாக ஆதரவளிக்கும்.

மேலும், ஜனநாயகத்தை அழித்து இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸைத் தமது கட்டுப்பாட்டுக்குள் அரசு கொண்டுவந்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் நான்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏழு, மேல் நீதிமன்றத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருந்தும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கு முடிந்து பல மாதங்களாகியும் அவற்றை நிரப்பாமல் இருப்பது, நீதிபதிகளின் பதவி உயர்வுகளைத் தடுத்துத் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெறுவதற்கான முயற்சியாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுகின்றது.

நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட 18 பில்லியனுக்கும் அதிகமான நிலக்கரி நட்டம், 323 கொள்கலன்கள் விடுவிப்பு, கடவுச்சீட்டு விவகாரம், அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் நகர மேயர்கள் மீதான இலஞ்சப் புகார்கள் குறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிங்கராஜா வனப்பகுதியில் உயிரினங்களை சேகரித்த சீனப் பிரஜைகளுக்கு பல கோடி ரூபாய் அபராதம்.!

சிங்கராஜா வனப்பகுதியின் இடைநிலை வலயத்தில் உள்ள உயிரினங்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கு, 7 கோடியே 64 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து…

33 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமிற்குக்…

88 0 0
இலங்கை செய்திகள்

கோணாவில் வட்டார மாவீரர் குடும்பத்தினர் கௌரவிப்பு.!

மாவீரர் வாரத்தை முன்னிட்டுக் கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.…

113 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகினகல பகுதியில் காணியொன்றில் நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் கல்இராமன்கட…

112 0 0