உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயில்வான் ரெங்கநாதனிடம் பொலிஸார் அதிரடி விசாரணை!

சினிமா 1 நாள் முன்
121 பார்வைகள்

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

குறிப்பாக, பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் வீடியோவில் ஐஸ்வர்யா குறித்து முன்வைத்த சில சர்ச்சைக்குரிய கருத்துகள் அர்ஜுன் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனது மகள் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், அவதூறுகளையும் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நடிகர் அர்ஜுன் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தார்.

இந்தப் புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சைபர் கிரைம் பொலிஸார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சென்னை வேப்பேரியில் உள்ள பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் நேரில் ஆஜரானார்.

அவரிடம் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தி, அவர் பதிவிட்ட வீடியோக்கள் மற்றும் கருத்துகள் குறித்து விளக்கம் பெற்றுள்ளனர்.

இனி இதுபோன்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசக்கூடாது எனப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

வனிதா விஜயகுமாரின் உருக்கமான பதிவுகள்!

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. தளபதி விஜய் நடிப்பில்…

13 0 0
சினிமா

பிரபல ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் வீட்டில் தீவிபத்து

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் ஆகியோருக்குச் சொந்தமான அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், கலபாசஸ் பகுதியில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில்…

121 0 0
சினிமா

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ இறுதி டிரெய்லர் வெளியாகியது

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் இன்று (23) வெளியாகியுள்ளது. நடிகை ஹேலி அட்வெல் (Hayley Atwell) இதற்கான…

127 0 0
சினிமா

‘அரசன்’ படத்தில் புது அவதாரம் – பிரியங்கா மோகன்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் தனது வித்தியாசமான கதாபாத்திரத்தை ரசிகர்கள் காண்பார்கள் என நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…

115 0 0