உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரபல ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் வீட்டில் தீவிபத்து

சினிமா 1 நாள் முன்
121 பார்வைகள்

ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் ஆகியோருக்குச் சொந்தமான அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், கலபாசஸ் பகுதியில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

நேற்று (23) நள்ளிரவுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த வீட்டுத் தொகுதியின் பாதுகாப்புப் பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சுமார் 20 அடி அகலமும் 40 அடி நீளமும் கொண்ட பராமரிப்புக் கொட்டகை போன்ற கட்டடமொன்று தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தினால் வேறு எந்தக் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என்பதுடன், எவருக்கும் காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தீ விபத்து தற்செயலாக இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தம்பதியினர் சுமார் 30 ஆண்டுகளாக இந்தச் சொத்துடன் தொடர்புபட்டுள்ளனர். 1997ஆம் ஆண்டு அங்கு பண்ணையொன்றைக் கொள்வனவு செய்த அவர்கள், பின்னர் அருகிலிருந்த காணிகளையும் வாங்கி சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலான வீட்டுத் தொகுதியை உருவாக்கியுள்ளனர்.

அங்கு சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான வீட்டையும் நிர்மாணித்துள்ளனர். இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளுக்கு ஏழு ஆண்டுகள் எடுத்ததாகவும், பல்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பழங்காலக் கலைப்பொருட்கள் மற்றும் கதவுகள் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அண்மைய ஆண்டுகளில் இருவரும் மீண்டும் ஒன்றாக வசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

வனிதா விஜயகுமாரின் உருக்கமான பதிவுகள்!

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. தளபதி விஜய் நடிப்பில்…

13 0 0
சினிமா

பயில்வான் ரெங்கநாதனிடம் பொலிஸார் அதிரடி விசாரணை!

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில்…

120 0 0
சினிமா

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ இறுதி டிரெய்லர் வெளியாகியது

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் இன்று (23) வெளியாகியுள்ளது. நடிகை ஹேலி அட்வெல் (Hayley Atwell) இதற்கான…

127 0 0
சினிமா

‘அரசன்’ படத்தில் புது அவதாரம் – பிரியங்கா மோகன்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் தனது வித்தியாசமான கதாபாத்திரத்தை ரசிகர்கள் காண்பார்கள் என நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…

115 0 0