‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ இறுதி டிரெய்லர் வெளியாகியது
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் இன்று (23) வெளியாகியுள்ளது.
நடிகை ஹேலி அட்வெல் (Hayley Atwell) இதற்கான வெளியீடு தொடர்பான தகவலை முன்கூட்டியே குறிப்பிட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
அந்தோணி மற்றும் ஜோ ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தில் ரொபர்ட் டவுனி ஜூனியர், டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


