உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பதிவுச் சான்றிதழ் இல்லாமல் சுகாதார விதிமீறல்களுடன் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற இருவருக்கு அபராதம்!

இலங்கை செய்திகள் 31 நிமிடங்கள் முன்
131 பார்வைகள்

உரிய வெப்பநிலை மற்றும் சுகாதாரத் தரங்களைப் பேணாமல் சுமார் 40,000 ரூபாய் பெறுமதியான தயிர் தொகையைக் கொண்டு சென்ற இருவருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 60,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான 6 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட குறித்த இரு பிரதிவாதிகளுக்கும் 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து வவுனியா, குருமன்காடு பகுதியிலுள்ள கூட்டுறவு நிறுவனமொன்றுக்கு இந்தத் தயிர் தொகை கொண்டு செல்லப்பட்ட வேளையில், வவுனியா மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் டி. ஜே ஜெயசிங்க மேற்கொண்ட சோதனையின் போதே, இவ்விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உரிய வெப்பநிலையைப் பேணாமல் தயிர் கொண்டு சென்றமை, மனித நுகர்வுக்கான உணவை கால்நடைத் தீவனத்துடன் சேர்த்துக் களஞ்சியப்படுத்தியமை, பதிவுச் சான்றிதழின்றி உணவைத் தயாரித்தமை, பெயரிடல் விதிமுறைகளை மீறியமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவைக் கொண்டு சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்துக் கைப்பற்றப்பட்ட குறித்த தயிர் தொகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது. வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, வவுனியா நீதவான் நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு அபராதம் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பால் உற்பத்திப் பொருட்களின் தயாரிப்பு, களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்தின் போது உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதன் முக்கியம் என  பொதுச் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

Act Now திட்டத்தின் DIRC உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி!

Act Now திட்டத்தின் கீழ், மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் (DIRC) உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்வு 18.11.2026 (புதன்கிழமை) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட…

129 0 0
இலங்கை செய்திகள்

டயகம முதல் கண்டி வரை அரச பேருந்து சேவை முன்னெடுக்கப்படாமையினால் பயணிகள் அவதி

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டயகம நகரிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு கண்டி நோக்கிப் பயணிக்கும் அரச பேருந்து சேவை கடந்த பல நாட்களாக இடம்பெறாத காரணத்தினால், அப்பகுதி…

135 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் வாரத்தையொட்டி நானாட்டானில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை(19) மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நானாட்டான் மற்றும் முசலி…

125 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம்: ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்தாய்வு!

2028–2032ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள் சபையின்…

133 0 0