உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம்: ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்தாய்வு!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
122 பார்வைகள்

2028–2032ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட இலங்கையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரு கட்டங்களாக நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், நாட்டின் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் முக்கிய தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளை முன்னோக்கிக் கொண்டுசெல்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

 நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு இணையாக, பொருளாதார ஸ்திரத்தண்டியிலிருந்து நிலைபேறான, அனைவரையும் உள்ளடக்கிய, ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை நோக்கியும், தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் நீண்டகாலக் கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

நிர்வாக மற்றும் கொள்முதல் செயல்முறைகளை முறைப்படுத்துதல், முதலீடுகளுக்கான அதிகாரத்துவத் தடைகளை நீக்குதல், அரச நிறுவனங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் அரச துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் மயமாக்கலைத் துரிதப்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

காலநிலை மீள்திறன், அனர்த்த அபாயத்தைக் குறைத்தல், விவசாய நவீனமயமாக்கல், உணவுப் பாதுகாப்பு, இலக்கு மையப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு, இளைஞர் வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதுமையடைந்து வரும் மக்களுக்கான தயார்நிலை ஆகியவை ஒத்துழைப்புக்காக அடையாளம் காணப்பட்ட ஏனைய முன்னுரிமைத் துறைகளாகும்.

ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்களின் சிறிய அளவிலான தனித்தனித் திட்டங்களுக்குப் பதிலாக, உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், இருக்கும் அரச நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும், ‘ஒரு பிரிவாகச் செயற்படுதல்’ என்ற ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், கலப்பு மற்றும் சலுகை நிதி வசதிகள், காலநிலை நிதிகள் மற்றும் அரச – தனியார் கூட்டாண்மை உள்ளிட்ட நவீன நிதியளிப்பு முறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

2028–2032 புதிய ஒத்துழைப்புச் சட்டகமானது இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் இணங்குவதை உறுதிசெய்து, தொழில்நுட்ப நிபுணத்துவம், நிறுவனத் திறன் உருவாக்கம் மற்றும் சர்வதேசக் கூட்டாண்மைகள் மூலம் இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராகவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவினர் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தலைமையிலான குழுவில், ஐ.நா. வதிவிட இணைப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அசாம் பக்கீர் மாக்கார், ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பின் தூதுக்குழுத் தலைவர் கிறிஸ்டின் பார்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டயகம முதல் கண்டி வரை அரச பேருந்து சேவை முன்னெடுக்கப்படாமையினால் பயணிகள் அவதி

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டயகம நகரிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு கண்டி நோக்கிப் பயணிக்கும் அரச பேருந்து சேவை கடந்த பல நாட்களாக இடம்பெறாத காரணத்தினால், அப்பகுதி…

123 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் வாரத்தையொட்டி நானாட்டானில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை(19) மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நானாட்டான் மற்றும் முசலி…

113 0 0
இலங்கை செய்திகள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி சாதனை!

தமிழ்நாடு – திருச்சியில் நடைபெற்ற மாவட்ட மட்ட ஐந்து கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்று, மூன்றாவது இடத்தைப் பெற்று ஈழத்தமிழ்ச்…

121 0 0
இலங்கை செய்திகள்

தம்புள்ளை – குருநாகல் வீதியில் கோர விபத்து : இ.போ.ச. பேருந்தும் ஓட்டோவும் மோதியதில் இருவர் ப@லி!

தம்புள்ளை – குருநாகல் வீதியில் ரங்கிரி தம்புள்ளை விளையாட்டரங்குக்கு முன்பாக நேற்றுப் புதன்கிழமை மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளமையுடன், மற்றுமொருவர்…

115 0 0