உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

டயகம முதல் கண்டி வரை அரச பேருந்து சேவை முன்னெடுக்கப்படாமையினால் பயணிகள் அவதி

இலங்கை செய்திகள் 52 நிமிடங்கள் முன்
124 பார்வைகள்

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டயகம நகரிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு கண்டி நோக்கிப் பயணிக்கும் அரச பேருந்து சேவை கடந்த பல நாட்களாக இடம்பெறாத காரணத்தினால், அப்பகுதி மக்கள் பெரும் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அதிகாலை வேளையில் தங்களது அன்றாடத் தேவைகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்கள், உரிய நேரத்தில் பேருந்து சேவை கிடைக்காததால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கண்டி வைத்தியசாலை, நாவலப்பிட்டி வைத்தியசாலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களுக்குச் சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளர்கள் இந்தப் பேருந்து சேவையை பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், பேருந்து சேவை இன்மையால் நோயாளர்கள் உரிய நேரத்தில் வைத்தியசாலைகளைச் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, டயகம, அக்கரப்பத்தனை, மண்றாசி, ஹோல்புரூக், , மேராயா உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து அதிகாலை வேளையில் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் மற்றும் அரச தனியார் நிறுவனங்கள் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தொழிலுக்குச் செல்வோரும் இந்தப் பேருந்து சேவையை நம்பியுள்ள நிலையில், உரிய நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காததால் அவர்களது அன்றாடப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய தினமும் அதிகாலை பல இடங்களில் பயணிகள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்த போதிலும், உரிய நேரத்தில் பேருந்து சேவை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) டிப்போ நிர்வாகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, டயகமவிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு கண்டி நோக்கிப் பயணிக்கும் அரச பேருந்து சேவையைத் தடையின்றி மீண்டும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மக்களின் அத்தியாவசியப் போக்குவரத்துத் தேவையைக் கருத்திற்கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை அதிகாரிகள் விரைந்து வழங்குவார்களா என்பதே டயகம மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது குறித்து உடனடியாக ஹட்டன் அரச பேருந்து சேவைகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு புதிய பேருந்துகளையும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என நுவரெலியா மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவீரர் வாரத்தையொட்டி நானாட்டானில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை(19) மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நானாட்டான் மற்றும் முசலி…

113 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம்: ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்தாய்வு!

2028–2032ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள் சபையின்…

122 0 0
இலங்கை செய்திகள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி சாதனை!

தமிழ்நாடு – திருச்சியில் நடைபெற்ற மாவட்ட மட்ட ஐந்து கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்று, மூன்றாவது இடத்தைப் பெற்று ஈழத்தமிழ்ச்…

122 0 0
இலங்கை செய்திகள்

தம்புள்ளை – குருநாகல் வீதியில் கோர விபத்து : இ.போ.ச. பேருந்தும் ஓட்டோவும் மோதியதில் இருவர் ப@லி!

தம்புள்ளை – குருநாகல் வீதியில் ரங்கிரி தம்புள்ளை விளையாட்டரங்குக்கு முன்பாக நேற்றுப் புதன்கிழமை மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளமையுடன், மற்றுமொருவர்…

115 0 0