உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
18 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெட்ரோலியப் பொருட்கள் மீதான ஏற்றுமதி வரிகளை உயர்த்தியது இந்திய அரசு!

இந்திய செய்திகள் 12 மணி நேரம் முன்
98 பார்வைகள்

புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலில், பெட்ரோலியப் பொருட்களுக்கான வரிகளை மத்திய அரசு தொடர்ந்து மீளாய்வு செய்து வரும் நிலையில், டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு 14 ரூபாயாகவும், விமான எரிபொருள் (ATF) மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு 12.5 ரூபாயாகவும் இந்திய மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மூன்று வாரங்களுக்கும் குறைவான கால இடைவெளியில் ஏற்றுமதி வரிகள் உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, டீசல் ஏற்றுமதி மீதான விசேட கூடுதல் கலால் வரி (SAED) லிட்டருக்கு 11.5 ரூபாயிலிருந்து 14 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், விமான எரிபொருள் மீதான வரி லிட்டருக்கு 11 ரூபாயிலிருந்து 12.5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி தொடர்ந்து பூஜ்ஜியமாகவே உள்ளது.

அதேபோல், விசேட கூடுதல் கலால் வரி மற்றும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி (RIC) ஆகியவையும் தொடர்ந்து பூஜ்ஜிய அளவிலேயே நீடிக்கின்றன.

திருத்தப்பட்ட கட்டணங்கள் நவம்பர் 16 முதல் நடைமுறைக்கு வந்தன.

இதற்கு முன்னதாக, ஒக்டோபர் 31 அன்று மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, டீசல் ஏற்றுமதி மீதான வரியை லிட்டருக்கு ரூ. 8.5-லிருந்து ரூ. 11.5 ஆகவும், விமான எரிபொருள் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 10.5-லிருந்து ரூ. 11 ஆகவும் இந்திய அரசாங்கம் உயர்த்தியிருந்தது.

அதேவேளையில், பெட்ரோல் ஏற்றுமதி மீதான லிட்டருக்கு ரூ. 2.5 என்ற வரியை நீக்கியிருந்தது.

மேற்கு ஆசிய நெருக்கடியின் பின்னணியில், பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றை உள்நாட்டில் தடையின்றி கிடைக்கச் செய்வதற்காக, பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் மீது ஏற்றுமதி வரிகள் 2026 மார்ச் 27, அன்று அறிமுகப்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒருமுறை இந்த விகிதங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

முந்தைய மதிப்பாய்வுக்குப் பிந்தைய காலகட்டத்தில் மசகு எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் சராசரி சர்வதேச விலைகளின் அடிப்படையில் இவை நிர்ணயிக்கப்படுகின்றன.

உள்நாட்டு நுகர்வுக்காக அனுமதிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தற்போதைய கலால் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை திருத்தும் முறையானது, உள்நாட்டு சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் போதுமான இருப்பைப் பராமரிக்கும் அதே வேளையில், சர்வதேச எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்றுமதி வரிகளை சரிசெய்ய மத்திய அரசுக்கு உதவுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறப்பு

மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (17) நடை திறக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பூஜைகளுடன் திறக்கப்பட்டது. முதல் நாளில்…

79 0 0
இந்திய செய்திகள்

சச்சினுடன் வீதியில் கிறிக்கெட் விளையாடிய பிரித்தானிய அரச தம்பதியினர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன், தமது பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் நடைபெற்ற…

88 0 0
இந்திய செய்திகள்

சீனாவுக்கு எதிரான தொழில்நுட்பக் கூட்டணியில் இந்தியா?

சீனா மேம்பட்ட தொழில்நுட்பங்களை, குறிப்பாக உயர்தர செமிகண்டக்டர் சிப்களைப் பெறுவது குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச்…

109 0 0
இந்திய செய்திகள்

இளவரசர் வில்லியமுடன் இந்தியா செல்கிறார் வேல்ஸ் இளவரசி கேட்!

பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட், புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பின்னர் மேற்கொள்ளும் மிக முக்கியமான வெளிநாட்டுப் பயணமாக, இந்த வாரம் இந்தியாவில் நடைபெறவுள்ள ‘எர்த்ஷாட் பரிசு’ (Earthshot Prize)…

105 0 0