உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பல்கேரியா கடற்பரப்பில் எரிவாயுக் கப்பல் மூழ்கியது

உலக செய்திகள் 14 மணி நேரம் முன்
94 பார்வைகள்

கருங்கடலில் உள்ள பல்கேரியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் பயணித்த எரிவாயுக் கப்பலொன்று இன்று (17) மூழ்கியுள்ளது.

எகிப்திலிருந்து ருமேனியா நோக்கிப் பயணித்த லைபீரியக் கொடியுடன் கூடிய ‘GAS HUSKY’ என்ற குறித்த திரவப் பெற்றோலிய வாயு (LPG) கப்பலில், சுமார் 3,400 மெட்ரிக் தொன் புரோப்பேன் எரிவாயு ஏற்றப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் நள்ளிரவுக்குப் பின்னர் ரெடார் கண்காணிப்பிலிருந்து மறைந்த நிலையில், இன்று காலை 8.02 மணியளவில் கப்பலிலிருந்து அவசர எச்சரிக்கை சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்கேரிய பாதுகாப்புப் படையினர் வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, கப்பலில் இருந்த 19 பிலிப்பைன்ஸ் பணியாளர்களும் உயிர்காப்புப் படகில் தஞ்சமடைந்திருந்த நிலையில், உலங்கு வானூர்திகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கப்பல் ஆளில்லா ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, நேற்றைய தினமும் பல்கேரிய கடற்பரப்பில் கோதுமை ஏற்றிச் சென்ற மற்றுமொரு கப்பல் மூழ்கியிருந்த நிலையில், அதிலிருந்த 12 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

Nvidia நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் திட்டமில்லை!

Nvidia நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹுவாங் திடீரென பதவி…

100 0 0
உலக செய்திகள்

ரஷ்யாவில் இராணுவ வானூர்தி விபத்து – 19 பேரும் உயி@ரிழப்பு!

ரஷ்யாவின் தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ள கெமெரோவோ பிராந்தியத்தில், அன்-12 (An-12) இராணுவ வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான தகவலை…

92 0 0
உலக செய்திகள்

உயிருடன் திரும்புவேனா என்று தெரியவில்லை! : இம்ரான் கான்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறி அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது…

104 0 0
உலக செய்திகள்

இந்தியாவின் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான்

இந்தியா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, ஷாங்காய்  (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பின் கலாசார மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை…

100 0 0