உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாவீரர் வாரத்தையொட்டி நானாட்டானில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
113 பார்வைகள்

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை(19) மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

நானாட்டான் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள 45 கிராமங்களில் இருந்து 225 க்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்களை,கலந்து கொண்டிருந்தனர்.

நானாட்டான் பாடசாலை சந்தியில் இருந்து பொதுப் படம் தாங்கி நடை பவனியாக ஆரம்பமானது.குறித்த நிகழ்வில் கத்தோலிக்க மத குருக்கள், முன்னாள் போராளிகள்,சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, நிகழ்வு நானாட்டான் பிரதேச சபை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பொதுச்சுடரினை மாவீரர் கலைமதியின் தாயார் திருமதி.செ. ராணி ஏற்றி வைத்தார்,

பொதுப் படத்திற்கான மலர் மாலையை மாவீரர் சர்மிலனின் தாயார் திருமதி இ. செபஸ்ரியம்மா அணிவித்தார்.நினைவுச் சுடரினை மாவீரர் புலிக்குட்டி அவர்களின் தாயார் திருமதி. ப. ருக்குமனி ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.மலர் வணக்கத்தை மாவீரர் இமானின் துணைவியார் ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வுகள்,சிறப்பு உரைகள் இடம் பெற்றதோடு பெற்றோர்களுக்கு நினைவு பொருள் வழங்கி வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டயகம முதல் கண்டி வரை அரச பேருந்து சேவை முன்னெடுக்கப்படாமையினால் பயணிகள் அவதி

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டயகம நகரிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு கண்டி நோக்கிப் பயணிக்கும் அரச பேருந்து சேவை கடந்த பல நாட்களாக இடம்பெறாத காரணத்தினால், அப்பகுதி…

123 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம்: ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்தாய்வு!

2028–2032ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள் சபையின்…

121 0 0
இலங்கை செய்திகள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்ச் சிறுமி சாதனை!

தமிழ்நாடு – திருச்சியில் நடைபெற்ற மாவட்ட மட்ட ஐந்து கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அறிஞர் அண்ணா சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்று, மூன்றாவது இடத்தைப் பெற்று ஈழத்தமிழ்ச்…

121 0 0
இலங்கை செய்திகள்

தம்புள்ளை – குருநாகல் வீதியில் கோர விபத்து : இ.போ.ச. பேருந்தும் ஓட்டோவும் மோதியதில் இருவர் ப@லி!

தம்புள்ளை – குருநாகல் வீதியில் ரங்கிரி தம்புள்ளை விளையாட்டரங்குக்கு முன்பாக நேற்றுப் புதன்கிழமை மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளமையுடன், மற்றுமொருவர்…

115 0 0