நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் தொடர்பில் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது பரங்கிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக நிர்வாகிகள் குறித்து ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பியதாகவும், மதுரையில் இடம்பெற்ற நகைக்கடைத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை தவெக உறுப்பினர் எனச் சித்தரித்ததாகவும் அவருக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், குழந்தையின் போசாக்குத் தேவைகள் மற்றும் சிறுமியின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் ‘அர்த்த’ திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.


