உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தம்புள்ளை – குருநாகல் வீதியில் கோர விபத்து : இ.போ.ச. பேருந்தும் ஓட்டோவும் மோதியதில் இருவர் ப@லி!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
116 பார்வைகள்

தம்புள்ளை – குருநாகல் வீதியில் ரங்கிரி தம்புள்ளை விளையாட்டரங்குக்கு முன்பாக நேற்றுப் புதன்கிழமை மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளமையுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சாரதியால் கவனயீனமாகச் செலுத்தப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயற்சித்தபோது, எதிரே வந்த ஓட்டோ மீது நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஓட்டோவில் பயணித்த இருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளமையுடன், அதில் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

Act Now திட்டத்தின் DIRC உறுப்பினர்களுக்கான பயிற்சி நெறி!

Act Now திட்டத்தின் கீழ், மாவட்ட இடர் முகாமைத்துவக் குழுவின் (DIRC) உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்வு 18.11.2026 (புதன்கிழமை) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட…

116 0 0
இலங்கை செய்திகள்

டயகம முதல் கண்டி வரை அரச பேருந்து சேவை முன்னெடுக்கப்படாமையினால் பயணிகள் அவதி

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டயகம நகரிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு கண்டி நோக்கிப் பயணிக்கும் அரச பேருந்து சேவை கடந்த பல நாட்களாக இடம்பெறாத காரணத்தினால், அப்பகுதி…

124 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் வாரத்தையொட்டி நானாட்டானில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை(19) மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நானாட்டான் மற்றும் முசலி…

115 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகம்: ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்தாய்வு!

2028–2032ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழியப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்புச் சட்டகத்தின் கீழ், இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஐக்கிய நாடுகள் சபையின்…

123 0 0