சென்னையில் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரிக்க சிறப்பு ஏற்பாடு
சென்னையில் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இதர வீட்டுக் கழிவுகளுடன் பட்டாசுக் கழிவுகளை கலக்காமல் தனியாகச் சேகரித்து வைத்து, தூய்மைப் பணியாளர்களிடம் அவற்றை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், குடிசைப் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


