உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: குடும்பத்துடன் கிரீஸ் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்

இந்திய செய்திகள் 9 மணி நேரம் முன்
82 பார்வைகள்

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் வரும் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டனர்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக கிரீஸ் நாட்டிற்குச் சென்றுள்ள அவர்கள், திருமண நிகழ்வுகளை முடித்துவிட்டு வரும் நவம்பர் 13-ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர்.

இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தினருடன் இன்று காலை சென்னையில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கிரீஸ் நாட்டில் நடைபெறும் திருமணத்தைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 21-ம் தேதி சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சென்னையில் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரிக்க சிறப்பு ஏற்பாடு

சென்னையில் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம்…

88 0 0
இந்திய செய்திகள்

மூடர்களின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பில்லை! : பொலிஸாருக்கும் பாதுகாப்பில்லை!

இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். இந்த சோப்ளாங்கி…

97 0 0
இந்திய செய்திகள்

இந்துக் குருமார் ஒன்றியத்தின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீபாவளி என்பது இந்துக்களின் பாரம்பரியத்திலும் ஆன்மிக வாழ்வியலிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள மகத்துவம் மிக்க திருநாளாகும். இருளை அகற்றி ஒளியை ஏற்றுகின்ற இத்திருநாள், வெறுமனே ஒரு கொண்டாட்ட…

70 0 0
இந்திய செய்திகள்

அன்பு நேயர்களுக்கு தினகரனின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! உங்கள் வாழ்வில் இருள் விலகி, அறிவு என்னும் ஒளி பெருகி, இன்மையும் துன்பமும் நீங்கி, இன்பமும் வளமும் பொங்க என் மனமார்ந்த தீபாவளி…

79 0 0