உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செனகல் அருகே படகு விபத்து : 34 பேர் உயி@ரிழப்பு

உலக செய்திகள் 11 மணி நேரம் முன்
78 பார்வைகள்

மேற்கு ஆபிரிக்காவின் செனகல் அருகே கடலில் படகு மூழ்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் தொடர்ந்து மீட்பு பணியை கடற்படையினர் மேற்கொண்டு இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செனகல் நாட்டின் தாக்கர் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் அட்லாண்டிக் கடற்கரையில் கெபிமேர் நகரம் அமைந்துள்ளது. 

இந்த நகரின் நகரப் பகுதியில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் நேற்று அதிகாலையில் ஒரு படகில் மேற்கு ஆப்பிரிக்கா வழியாக ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்கு செல்ல புறப்பட்டனர்.

அவர்கள் புறப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக கடலில் படகு கவிழ்ந்து மூழ்கியது. இதில் 34 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், ஒருவர் மீட்கப்பட்டு இருப்பதாகவும் செனகல் நாட்டு உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விவரம் இதுவரையில் தெரியவில்லை என்றும், மீட்பு பணியை கடற்படையினர் மேற்கொண்டு இருப்பதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது மிகவும் ஆபத்தான கடல் வழி என்றும், கடந்த 5 மாதங்களில் மட்டும் 635 பேர் இக்கடல் வழியாக பயணித்து படகு மூழ்கி உயிரிழந்து இருப்பதாகவும் செனகல் நாட்டு கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு!

இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய ஆட்சியை அமைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான காடி ஐசன்கோட்டிடம் (Gadi Eisenkot) ஒப்படைக்கவுள்ளதாக…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது ஜனாதிபதி பதவிக்கால அனுபவங்களை உள்ளடக்கிய “Promise Me, America” என்ற நினைவுக் குறிப்புகள்…

87 0 0
உலக செய்திகள்

எகிப்தில் இரு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் ப@லி

எகிப்திய நகரமான கீஸாவுக்கு (Giza) அருகில் நடந்த ஒரு ரயில் விபத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

88 0 0
உலக செய்திகள்

அன்பு நேயர்களுக்கு தினகரனின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! உங்கள் வாழ்வில் இருள் விலகி, அறிவு என்னும் ஒளி பெருகி, இன்மையும் துன்பமும் நீங்கி, இன்பமும் வளமும் பொங்க என் மனமார்ந்த தீபாவளி…

79 0 0