தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன் இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியிருந்தமை அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஹம் பிரசாத் என்ற பலதுர ரங்கிரியலாகே பிரசாத் சுசந்த ஜயசிரி எனப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
அண்மையில் அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகிலுள்ள பொலிஸாருக்கும், தேரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அநுராதபுரம் புனித நகரத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தேரர்கள் உள்ளிட்டோரை அங்கிருந்து கலைப்பதற்கு முற்பட்ட போது, பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், பின்னர் அது மோதல் நிலைக்கு தீவிரமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


