உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எகிப்தில் இரு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் ப@லி

உலக செய்திகள் 11 மணி நேரம் முன்
89 பார்வைகள்

எகிப்திய நகரமான கீஸாவுக்கு (Giza) அருகில் நடந்த ஒரு ரயில் விபத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கீஸா மற்றும் கெய்ரோவிலிருந்து தெற்கு நோக்கிச் சென்ற இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதியதில், பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்ததாக எகிப்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி இந்த விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து விசாரணை நடத்துமாறும், அலட்சியமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

எகிப்திய செம்பிறை சங்கம், விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளையும் மனரீதியான ஆதரவையும் வழங்கி வருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு ரயிலின் சாரதியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு எகிப்தில் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு!

இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய ஆட்சியை அமைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான காடி ஐசன்கோட்டிடம் (Gadi Eisenkot) ஒப்படைக்கவுள்ளதாக…

89 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது ஜனாதிபதி பதவிக்கால அனுபவங்களை உள்ளடக்கிய “Promise Me, America” என்ற நினைவுக் குறிப்புகள்…

88 0 0
உலக செய்திகள்

செனகல் அருகே படகு விபத்து : 34 பேர் உயி@ரிழப்பு

மேற்கு ஆபிரிக்காவின் செனகல் அருகே கடலில் படகு மூழ்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் தொடர்ந்து மீட்பு பணியை கடற்படையினர் மேற்கொண்டு…

79 0 0
உலக செய்திகள்

அன்பு நேயர்களுக்கு தினகரனின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! உங்கள் வாழ்வில் இருள் விலகி, அறிவு என்னும் ஒளி பெருகி, இன்மையும் துன்பமும் நீங்கி, இன்பமும் வளமும் பொங்க என் மனமார்ந்த தீபாவளி…

79 0 0