உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
80 பார்வைகள்

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ‘மூக்குத்தூள்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சோதனை நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (03) கல்முனைக்குடி பகுதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான ‘தீகாயு’ கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இக் கூட்டு நடவடிக்கை திட்டமிடப்பட்டது.

இதன்போது கல்முனைக்குடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரைச் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து சட்டவிரோத விற்பனைக்காகப் பொதி செய்யப்பட்டிருந்த 6 கிலோகிராமிற்கும் அதிகமான எடை கொண்ட 94 சிறிய மூக்குத்தூள் பொதிகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடனும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்டபூர்வ நடவடிக்கைகளுக்காக கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகத்திடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அஸ்வெசும உதவித்தொகை கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் முறைப்பாடு.!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, மக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து…

85 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள்…

80 0 0
இலங்கை செய்திகள்

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி; இருவர் கைது.!

பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

70 0 0