உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
69 பார்வைகள்

பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திம்பிரிகட்டுவ மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 59 வயதுடையவர்கள் ஆவர்.

குறித்த நிதி நிறுவனத்தைப் பராமரித்தல், மேம்படுத்துதல், பிரச்சாரப்படுத்துதல், நிதி வழங்கல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, நேற்று செவ்வாய்க்கிழமை (03) நீர்கொழும்பு பகுதியில் வைத்து இந்த நிதி மோசதியுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து…

75 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச்…

74 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள்…

78 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பதவி விலகத் தயார்.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில், அவர் தனது பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாராக உள்ளார் என அறியமுடிகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்…

77 0 0