உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன பதவி விலகத் தயார்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
76 பார்வைகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில், அவர் தனது பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாராக உள்ளார் என அறியமுடிகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபை ஒழுங்குப் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய சிறப்புரிமைப் பிரச்சினைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையைக் கண்டித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையே தற்போது நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாகும்.

அரச சொத்துகளை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக 17 குற்றச்சாட்டுகள், 20 இலஞ்சக் குற்றச்சாட்டுகள் மற்றும் பக்கச்சார்பாகச் செயற்பட்டமை தொடர்பான 13 குற்றச்சாட்டுகள் அடங்கலாக மொத்தம் 50 பாரதூரமான குற்றச்சாட்டுகள் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகளுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் சபை நிர்வாகத்தினர் முறைகேடாகச் செயற்பட்டு வருகின்றனர்.

பிரதிச் சபாநாயகர் சபைக்குத் தலைமை தாங்குவதற்கான காரணம் சபாநாயகர் பதவி விலகியதனாலா? சபாநாயகர் இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கின்றாரா? அல்லது அவர் பதவி விலகுவாரா? சபாநாயகர் தானாகவே பதவி விலகவுள்ளதாக எமக்கு நம்பத்தகுந்த வட்டாரங்கள் வாயிலாக அறியக் கிடைத்துள்ளது.

அவர் தானாக முன்வந்து பதவி விலகினால் நாங்கள் அதனை வரவேற்போம். மாறாக, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்கவும், எமது கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், முறையான விசாரணைக்கு முகங்கொடுக்கவும் சபாநாயகருக்குத் துணிவு இருக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள்…

76 0 0
இலங்கை செய்திகள்

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி; இருவர் கைது.!

பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

67 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகர் தவறிழைத்திருந்தால் கட்சியே அவரை நீக்கியிருக்கும்.!

“சபாநாயகர் தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் வரை காத்திருக்காமல், ஆளுங்கட்சியே நிச்சயமாக நடவடிக்கை எடுத்திருக்கும்.” இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞன் உட்பட நால்வர் கைது.!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே குந்துகால் கடல் பகுதியில், கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞனை கியூ பிரிவு பொலிஸார் மற்றும் மண்டபம்…

73 0 0