உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை?

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
72 பார்வைகள்

வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியை நோக்கி அடையாளம் காணப்படாத ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு இன்று (04) இதனை அறிவித்துள்ளதுடன், இது வடகொரியாவின் மற்றுமொரு ஏவுகணைச் சோதனையாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏவப்பட்ட ஏவுகணையின் வகை மற்றும் ஏனைய விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் வடகொரியா மேற்கொண்ட நான்காவது ஏவுகணைச் சோதனையாக இது இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடகொரியா இந்த ஆண்டில் பல்வேறு ஏவுகணைச் சோதனைகளை முன்னெடுத்துள்ளதுடன், 900 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் பயணிக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் அதிவேக ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

எனக்கு உடன்பாடில்லாத மசோதாக்களை ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவந்தால், அவற்றை வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரிப்பேன்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் (Democrats) ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், தான் எதிர்க்கும் சட்டங்களை முடக்குவதற்கு ஜனாபதியின் ‘வீட்டோ’ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

72 0 0
உலக செய்திகள்

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்திலிருந்து சத்யராஜ் நீக்கப்பட்டாரா? – வெளியாகியுள்ள புதிய தகவல்!

நடிகர் அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்திலிருந்து நடிகர் சத்யராஜ் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தனது ‘பிரேவ்…

75 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு எதிராக ஈரானின் “உயர் தடுப்புச் திட்டம்”

அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் எதிராக “உயர் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை” (Maximum Deterrence) ஆயத்தப்படுத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், பரந்த புவியியல் பிராந்தியங்கள்…

86 0 0
உலக செய்திகள்

ஸ்பெயின் தொடருந்து விபத்து: போக்குவரத்து அமைச்சர் பதவி விலகல்!

ஸ்பெயினில் 69 பேர் உயிரிழந்த தொடருந்து விபத்து இடம்பெற்று ஆறு நாட்களுக்குப் பின்னர், அந்தநாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவென்டே பதவி விலகியுள்ளார். கடந்த ஒக்ரோபர் 28ஆம்…

83 0 0