உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கைக்குள் ஒரு நெல்சன் மண்டேலா.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
91 பார்வைகள்

நாமல் ராஜபக்ஷவைச் சிறையில் அடைத்துள்ளதன் மூலம், இலங்கைக்குள் ஒரு நெல்சன் மண்டேலாவை உருவாக்கும் வேலையையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்து வருகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய மக்கள் சக்தி அரசின் தேவைக்கேற்பவே நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் தற்போது பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது. எனினும், நாட்டின் நீதித்துறை மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. நீதிபதிகள் எப்போதுமே சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் உள்ள ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஷ தற்போது பிணை மறுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவைச் சிறையில் அடைத்துவிட்டுத் தமது அரசியல் பயணத்தைச் தடையின்றித் தொடரலாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நினைத்தால், அது முற்றிலும் தவறான கணக்கீடாகும். இதன் மூலம் அநுரகுமார திஸாநாயக்க இலங்கைக்குள் மற்றொரு நெல்சன் மண்டேலாவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். அரசின் இந்த நடவடிக்கையானது, அநுரவின் அரசியல் இலக்குகள் முற்றிலுமாகத் தவறிப்போயுள்ளன என்பதையே தெளிவுபடுத்துகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித் களத்தில் இறங்கி வேலை செய்யும் ஒரே தலைவர் – ரஞ்சித் மத்தும பண்டார புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அதிகமாகப் பேசுகின்றார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி மத பாரபட்சமின்றி மக்கள் மீது உண்மையான அன்பும்…

70 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியைத் தற்போதைய அரசும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு…

71 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை ஏற்றம்; கூடுதல் சுமை என மக்கள் கவலை.!

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில்…

66 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலையில் குருதிக்கொடை முகாம்

திருகோணமலை மெதடிஸ்த திரு அவையின் திருகோணமலை சேகர வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட இரத்ததான முகாம், டொக்யாட் மெதடிஸ்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் குருதிக்கொடை…

76 0 0