உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சஜித் களத்தில் இறங்கி வேலை செய்யும் ஒரே தலைவர் – ரஞ்சித் மத்தும பண்டார புகழாரம்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
75 பார்வைகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அதிகமாகப் பேசுகின்றார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி மத பாரபட்சமின்றி மக்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டுள்ள ஒரே தலைவர் அவரே என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருபோதும் ஊழல், மோசடிகளில் ஈடுபடாத, எந்தவிதக் கறைகளும் படியாத தூய்மையான அரசியல் தலைவராவார். நன்கு கல்வி கற்றுத் தேர்ந்துள்ள அவர், அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பரந்த அறிவுடன் கருத்துக்களை முன்வைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவராவார்.

சஜித் பிரேமதாஸ அதிகமாகப் பேசுகின்றார் என்ற விமர்சனங்கள் சிலரால் முன்வைக்கப்பட்டாலும், அவர் வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி ஆக்கபூர்வமாக வேலைகளைச் செய்து முடிப்பவர். அண்மைக்காலத்தில் நாட்டில் பௌத்த விகாரைகளுக்கும் தாதுகோபுரங்களுக்கும் அதிகளவில் உதவி செய்த தலைவராக அவர் விளங்குவதுடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களைப் புனரமைத்தல், முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு ஆதரவளித்தல் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் பாரபட்சமின்றி உதவி புரிந்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே பாடசாலைகளுக்கு நவீன ஸ்மார்ட் வகுப்பறைகளையும் புதிய தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றார்.

ஜே.வி.பி. காலப்பகுதியில் கர்ப்பிணித் தாய்மார்களின் வயிற்றைக் கிழித்துக் குழந்தைகளை வெளியே எடுத்த கொடூரங்களும், மக்கள் வாக்களிக்கச் சென்றபோது ஒரு வாக்குச் சாவடியிலேயே நான்கு பேர் கொல்லப்பட்ட கோரச் சம்பவங்களும் இடம்பெற்றன. இவ்வாறான கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிடம் மக்கள் மீதான அன்பு இருக்க முடியாது. சஜித் பிரேமதாஸ மட்டுமே மக்கள் மீது உண்மையான அன்பு கொண்டு நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவராவார்.

தற்காலத்தில் இந்த நாட்டு இளைஞர்களும் மாணவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்வதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து இங்கேயே தங்கி வாழ்வதற்கு ஏற்ற வகையில் நாட்டின் பொருளாதாரம் உடனடியாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

வரலாற்று ரீதியாக டி. எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே. ஆர். ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாஸ ஆகியோர் உருவாக்கிய பொற்கால மறுமலர்ச்சி மீண்டும் இந்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் 1988–1989 காலப்பகுதி வன்முறைகள், 2001ஆம் ஆண்டு மற்றும் கோட்டாபயவின் ஆட்சி காரணமாகப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தபோதெல்லாம், அதனை மீளக்கட்டியெழுப்பிய வரலாறு எங்களது பாரம்பரியத் தலைமைத்துவங்களுக்கே உண்டு.

எனவே, நாட்டின் நலன் கருதி இரு பிரதான கட்சிகளும் இணைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், நாட்டை வெற்றிப் பாதைக்குக் கொண்டுசெல்லவும், விவசாயிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களையும் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மிக விரைவில் கைகோர்த்து வெற்றிகரமான அரசியல் கூட்டணியை உருவாக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியைத் தற்போதைய அரசும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு…

74 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை ஏற்றம்; கூடுதல் சுமை என மக்கள் கவலை.!

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில்…

69 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலையில் குருதிக்கொடை முகாம்

திருகோணமலை மெதடிஸ்த திரு அவையின் திருகோணமலை சேகர வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட இரத்ததான முகாம், டொக்யாட் மெதடிஸ்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் குருதிக்கொடை…

78 0 0
இலங்கை செய்திகள்

வரிகளைச் சுமத்திவிட்டு அநுர பொய்ப் பிரச்சாரம்; சாகர காரியவசம் கடும் தாக்கு.!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் வரி செலுத்தாத வகையில், தற்போதைய நாட்டுத் தலைவர் மக்கள் மீது வரிகளைச் சுமத்திவிட்டுப் பெருமிதம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன…

65 0 0