உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மயிலத்தமடு – மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
75 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியைத் தற்போதைய அரசும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு (கச்சேரி) முன்பாக மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற வேளையில், மாவட்ட செயலகத்தைச் சூழப் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், செ.கஜேந்திரன், அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வடக்கு மாகாணத்திலிருந்து வருகை தந்திருந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து வருகை தந்திருந்த சிங்கள மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு பண்ணையாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“மக்களின் கோரிக்கைக்குத் தீர்வு தர வேண்டும்”, “பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “அபிவிருத்திக் குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து”, “மேய்ச்சல் தரை நிலம் எமக்கு வேண்டும்”, “சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை வெளியேற்று”, “மகாவலியே வெளியேறு” போன்ற கோஷங்களை எழுப்பி, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களால் பண்ணையாளர்களுக்கும் அவர்களின் பசுக்களுக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின்போது பண்ணையாளர்கள் 7 பேரை மாத்திரம் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் அழைத்து உரையாடினார். எனினும், அரச அதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடல் தமக்குத் திருப்தியளிக்கவில்லை என்று  அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு திரும்பிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது இவ்வாறு இருக்க, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி கோரிய போராட்டத்தை முன்னின்று நடத்திய 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகச் செயற்பாட்டு ஒன்றியத்தின் இணைப்பாளர் அருட்பணி லுக்ரோன் அடிகளார் தெரிவித்தார்.

தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத், சிவில் சமூகச் செயற்பாட்டு ஒன்றியத் தலைவர் சிவயோகநாதன், பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன், விவசாயிகள் சம்மேளனத் தலைவர் மோகன் ஆகியோருக்கு எதிராகவே நீதிமன்றத்தால் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிமன்றத் தடை உத்தரவை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித் களத்தில் இறங்கி வேலை செய்யும் ஒரே தலைவர் – ரஞ்சித் மத்தும பண்டார புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அதிகமாகப் பேசுகின்றார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி மத பாரபட்சமின்றி மக்கள் மீது உண்மையான அன்பும்…

76 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை ஏற்றம்; கூடுதல் சுமை என மக்கள் கவலை.!

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில்…

71 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலையில் குருதிக்கொடை முகாம்

திருகோணமலை மெதடிஸ்த திரு அவையின் திருகோணமலை சேகர வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட இரத்ததான முகாம், டொக்யாட் மெதடிஸ்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் குருதிக்கொடை…

79 0 0
இலங்கை செய்திகள்

வரிகளைச் சுமத்திவிட்டு அநுர பொய்ப் பிரச்சாரம்; சாகர காரியவசம் கடும் தாக்கு.!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் வரி செலுத்தாத வகையில், தற்போதைய நாட்டுத் தலைவர் மக்கள் மீது வரிகளைச் சுமத்திவிட்டுப் பெருமிதம் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன…

66 0 0