உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆந்திராவை நெருங்கும் ‘முரசு’ – 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்!

இந்திய செய்திகள் 1 வாரம் முன்
126 பார்வைகள்

திங்கட்கிழமை (நவம்பர் 2) அதிகாலை வேளையில், மேற்கு-மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக் கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த ‘முரசு’ (Murasu) சூறாவளி, தீவிர சூறாவளியாக வலுவடைந்தது.

இந்த வளிமண்டல அமைப்பு தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையில் ஓங்கோல் அருகே ஒரு தீவிர சூறாவளி புயலாகக் கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. ஆகவும், அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அது எச்சரித்தது.

ஞாயிற்றுக்கிழமை (01) வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ‘முரசு’ என்று பெயரிடப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சூறாவளியாக வலுவடைந்தது. 

இந்தச் சூறாவளி, நவம்பர் 3 ஆம் திகதி காலை ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும் நரசபூருக்கும் இடையே கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (02) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

தெலுங்கானாவில் இன்று ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு முழுமையாகத் தயாராக இருக்குமாறு ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். 

அதேவேளையில், அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒடிசாவும் தனது தெற்குப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்திய இளம் மருத்துவர் லாவன்யா காலமானார்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் நரம்பியல் நிபுணர் மருத்துவர் லாவன்யா திடீரென காலமானார். இவரது மறைவு ஆந்திர மருத்துவத் துறையினர் மற்றும்…

88 0 0
இந்திய செய்திகள்

டெல்லியில் செயற்கை மழையை பொழிவிக்கத் திட்டம்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும்…

93 0 0
இந்திய செய்திகள்

எயார் இந்தியா விமானத்துக்கு கடத்தல் மிரட்டல்!

மும்பை நோக்கிச் செல்லவிருந்த எயார் இந்தியா விமானம் ஒன்றின் கழிவறையில், அந்த விமானத்தைக் கடத்துவதாக மிரட்டல் விடுத்த குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் புறப்படுவதற்குச் சற்று…

93 0 0
இந்திய செய்திகள்

சபரிமலையில் நெய்க்கு தட்டுப்பாடு!

சபரிமலை ஐயப்பன் கோவில் பருவகாலம் நெருங்கும்நிலையில், நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிவதாக தெரிவிக்கப்படுகிறது. திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய கூட்டம் நேற்று நடந்த நிலையில், அதன் தலைவர்…

93 0 0