உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

படோவிட்ட அசங்கவின் போ*தைப்பொருள் நடவடிக்கைகளை வழிநடத்திய பெண் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
90 பார்வைகள்

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘படோவிட்ட அசங்க’ என்பவரின் போதைப்பொருள் நடவடிக்கைகளை நாட்டில் வழிநடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய பெண் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கொம்பஞ்சகே அசங்க சானக்க பொன்சேகா எனப்படும் பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தெஹிவளைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகச் செயற்பட்ட அதிகாரிகள் குழுவினர், தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கிஸ்ஸ, அபேசேகர வீதியிலுள்ள வீடொன்றிற்கு முன்னால் இச்சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து 62 கிராமும் 600 மில்லிகிராமும் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், இவர் நீண்டகாலமாகப் ‘படோவிட்ட அசங்க’வின் இலங்கையிலான போதைப்பொருள் விநியோகம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையுடன் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித் களத்தில் இறங்கி வேலை செய்யும் ஒரே தலைவர் – ரஞ்சித் மத்தும பண்டார புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அதிகமாகப் பேசுகின்றார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி மத பாரபட்சமின்றி மக்கள் மீது உண்மையான அன்பும்…

71 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியைத் தற்போதைய அரசும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு…

71 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை ஏற்றம்; கூடுதல் சுமை என மக்கள் கவலை.!

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில்…

66 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலையில் குருதிக்கொடை முகாம்

திருகோணமலை மெதடிஸ்த திரு அவையின் திருகோணமலை சேகர வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட இரத்ததான முகாம், டொக்யாட் மெதடிஸ்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் குருதிக்கொடை…

76 0 0