சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு; தப்ப முயன்ற கைதி உ**யிரிழப்பு.!
பல்லேகெலவிலுள்ள தும்பறை சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் சிறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறை ஆணையருமான செனக பல்லேதென்ன கூறுகையில்,
கைதி சிறைச்ச்சாலை சுவருக்கு அருகிலுள்ள ஒரு பாதுகாப்பு அறைக்குள் ஏறி, அங்கு பணியில் இருந்த சிறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றார்.
தப்பிக்க முயன்ற கைதி மீது அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த கைதி, தும்பறை சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


