உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழியல் சிறப்புப் பட்டக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கொடிகாமத்தில் இடம்பெற்றது

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
71 பார்வைகள்

தமிழ் இணைய கல்விக்கழகமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய வடக்கு மாகாணத்தின் 9 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமத்தில் அமைந்துள்ள நட்சத்திர மஹாலில் இன்று (01) வெகு விமர்சையாக இடம் பெற்றது.

தமிழியல் சிறப்பு பட்டக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 70 மாணவர்கள் இதன்போது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் முதல் வகுப்பில் சிறப்பு சித்திபெற்ற ஐந்து மாணவர்கள் “ராஜராஐ சோழன்” விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். 

மேலும், பிரஞ்சு மொழி மற்றும் ஜேர்மன் மொழி கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கும் இதன்போது பட்டயச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வடக்கு மாகாண இணைப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான க.ரஜனிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், 

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி தி.விக்கினேஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் பட்டங்களை வழங்கி வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்வில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வடக்கு மாகாண சிரேஷ்ட சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.அனஸ், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வடக்கு மாகாண விரிவுரையாளர்களான சி.இளந்திரையன், க.முருகதாஸ், பிரஞ்சு மொழி விரிவுரையாளர் துஷ்யந்தி ரஜனிகாந்தன், ஜேர்மன் மொழி விரிவுரையாளர் ஆர்.மயூரதன் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு – மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல்!

குறிப்பாக பெரியநீலாவணை முதல் பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளிலும், இப்பிரதேசங்களில் அமைந்துள்ள பிரதான கால்வாய்கள், ஆற்றுப்படுக்கைகள், நீரோடைகள் மற்றும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் அதிகளவிலான முதலைகள் தென்படுவதாகப்…

85 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்

மயிலத்தமடு பிரச்சனையைப் பொறுத்தவரையிலே இனவாதத்தைத் தூண்டுகின்ற வகையிலே, அதாவது தோல்வியடைந்த ஒரு அரசியல் கலாச்சாரத்துக்குள் இருக்கிறவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக இந்த பிரச்சனையை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுப்பதற்கு…

90 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டம் : ஆதரவு வழங்குமாறு அனைவருக்கும் அழைப்பு

வடகிழக்கில் எல்லைக்கிராமங்கள் சூறையாடப்படுகின்றது.இதன் ஒரு பகுதியே மயிலத்தமடு,மாதவனை பகுதியிலும் முன்னெடுக்கப்படும் அபகரிப்பு நடவடிக்கையாகும்.இந்த செயற்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் கைகோர்க்கவேண்டும் என தயாக…

86 0 0
இலங்கை செய்திகள்

பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது மாணவன் ப@லி!

பொகவந்தலாவ, கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவ லின்போட் (Lynford) தோட்டப் பாடசாலையில் தரம் 5இல்…

71 0 0