உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது மாணவன் ப@லி!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
72 பார்வைகள்

பொகவந்தலாவ, கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவ லின்போட் (Lynford) தோட்டப் பாடசாலையில் தரம் 5இல் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் தனது தாத்தாவுடன் கால்நடைகளுக்காக உணவு கொண்டுவர  சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாத்தா புல் வெட்டிக் கொண்டிருந்த வேளையில், பேரனைக் காணாததால் சந்தேகமடைந்து அப்பகுதி மக்களின் உதவியுடன் கெசல்கமுவ ஓயாவில் தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போதே மாணவனின் சடலம் ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

சடலம் தற்போது பொகவந்தலாவ பிரதேச மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழியல் சிறப்புப் பட்டக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கொடிகாமத்தில் இடம்பெற்றது

தமிழ் இணைய கல்விக்கழகமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய வடக்கு மாகாணத்தின் 9 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமத்தில் அமைந்துள்ள நட்சத்திர மஹாலில்…

71 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு – மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல்!

குறிப்பாக பெரியநீலாவணை முதல் பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளிலும், இப்பிரதேசங்களில் அமைந்துள்ள பிரதான கால்வாய்கள், ஆற்றுப்படுக்கைகள், நீரோடைகள் மற்றும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் அதிகளவிலான முதலைகள் தென்படுவதாகப்…

86 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்

மயிலத்தமடு பிரச்சனையைப் பொறுத்தவரையிலே இனவாதத்தைத் தூண்டுகின்ற வகையிலே, அதாவது தோல்வியடைந்த ஒரு அரசியல் கலாச்சாரத்துக்குள் இருக்கிறவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக இந்த பிரச்சனையை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுப்பதற்கு…

90 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டம் : ஆதரவு வழங்குமாறு அனைவருக்கும் அழைப்பு

வடகிழக்கில் எல்லைக்கிராமங்கள் சூறையாடப்படுகின்றது.இதன் ஒரு பகுதியே மயிலத்தமடு,மாதவனை பகுதியிலும் முன்னெடுக்கப்படும் அபகரிப்பு நடவடிக்கையாகும்.இந்த செயற்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் கைகோர்க்கவேண்டும் என தயாக…

86 0 0