உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு – மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
84 பார்வைகள்

குறிப்பாக பெரியநீலாவணை முதல் பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளிலும், இப்பிரதேசங்களில் அமைந்துள்ள பிரதான கால்வாய்கள், ஆற்றுப்படுக்கைகள், நீரோடைகள் மற்றும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் அதிகளவிலான முதலைகள் தென்படுவதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது நிலவும் காலநிலை மாற்றம், தொடர்ச்சியான மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக முதலைகள் தமது வழக்கமான இயற்கை வாழ்விடங்களிலிருந்து வெளியேறி, நீரோட்டத்துடன் அடித்து வரப்பட்டுப் புதிய நீர்நிலைகளிலும் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன.

சம்மாந்துறை, கல்முனை , நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்ற ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ்வாறான முதலைகளின் நடமாட்டம் அதிகமாகப் பதிவாகியுள்ளது.அண்மைக்காலமாகச் சில குடியிருப்புப் பகுதிகளுக்குள் சுமார் 5 அடி முதல் 9 அடி வரை நீளமுடைய பாரிய முதலைகள் புகுந்து, வளர்ப்பு நாய்கள், கோழிகள் உள்ளிட்டவற்றை வேட்டையாடிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சில இடங்களில் முதலைகள் நடமாடும் பகுதிகளைப் பார்வையிடப் பொதுமக்கள் செல்வதுடன்  குறிப்பிட்ட சில இடங்களில் எச்சரிக்கைப் பலகைகளும் நடப்பட்டுள்ளன.

இப் முதலைகளின் நடமாட்டம் மனிதர்களுக்கு மாத்திரமன்றி, மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வயல் நிலங்களிலும் திறந்த வெளிகளிலும் மேயும் பசுக்கள், எருமைகள் நீரருந்துவதற்காகக் கால்வாய்கள் மற்றும் குளங்களுக்குச் செல்லும்போது முதலைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

நிலவும் ஆபத்தான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் மழை மற்றும் வெள்ளப் பெருக்குக் காலங்களில் கால்வாய்கள், குளங்கள், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.சிறுவர்கள், பெண்கள் மற்றும் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு அருகில் தனியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது என  பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்:

அதேவேளை, குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் முதலைகளைப் பிடித்துப் பாதுகாப்பான வனப்பகுதிகளில் விடுவிக்கவும், முதலைகளின் அச்சுறுத்தலில் இருந்து மனித உயிர்களையும் கால்நடைகளையும் பாதுகாக்கவும் வனஜீவராசிகள் திணைக்களம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிராந்திய நிர்வாக அதிகாரிகள் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அவசர கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழியல் சிறப்புப் பட்டக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கொடிகாமத்தில் இடம்பெற்றது

தமிழ் இணைய கல்விக்கழகமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய வடக்கு மாகாணத்தின் 9 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமத்தில் அமைந்துள்ள நட்சத்திர மஹாலில்…

67 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்

மயிலத்தமடு பிரச்சனையைப் பொறுத்தவரையிலே இனவாதத்தைத் தூண்டுகின்ற வகையிலே, அதாவது தோல்வியடைந்த ஒரு அரசியல் கலாச்சாரத்துக்குள் இருக்கிறவர்கள் தங்கள் சுயலாப அரசியலுக்காக இந்த பிரச்சனையை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுப்பதற்கு…

88 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு, மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டம் : ஆதரவு வழங்குமாறு அனைவருக்கும் அழைப்பு

வடகிழக்கில் எல்லைக்கிராமங்கள் சூறையாடப்படுகின்றது.இதன் ஒரு பகுதியே மயிலத்தமடு,மாதவனை பகுதியிலும் முன்னெடுக்கப்படும் அபகரிப்பு நடவடிக்கையாகும்.இந்த செயற்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு அனைவரும் கைகோர்க்கவேண்டும் என தயாக…

83 0 0
இலங்கை செய்திகள்

பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது மாணவன் ப@லி!

பொகவந்தலாவ, கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவ லின்போட் (Lynford) தோட்டப் பாடசாலையில் தரம் 5இல்…

69 0 0