உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கு ஒளிவிளக்கு! – தமிழக முதல்வர் விஜய் தெரிவிப்பு

இந்திய செய்திகள் 3 மணி நேரம் முன்
79 பார்வைகள்


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுத் தமிழ்நாடு மாநிலம் உருவான நவம்பர் 1 ஆம் திகதியை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் விஜய் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதியைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதல்வர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் விசேட வாழ்த்துச் செய்தியொன்றைப் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் எல்லைப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் அரும்பாடுபட்ட தியாகிகளின் வரலாறு, தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும் வரலாற்று ஒற்றுமைக்கும் என்றென்றும் ஒளிவிளக்காகவும் வழிகாட்டியாகவும் திகழும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளை உலகரங்கில் தொடர்ந்து நிலைநிறுத்திட நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதியேற்போம்!” – என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

வருங்காலத்தில் தமிழர் ஒருவர்இந்தியாவின் பிரதமராவது உறுதி : துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அதிரடி கணிப்பு

இந்தியாவில் தமிழர் ஒருவர் பிரதமராவதற்கு நிச்சயம் வாய்ப்புகள் உள்ளன என்றும், வருங்காலத்தில் தமிழர் ஒருவர் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.…

98 0 0
இந்திய செய்திகள்

ஜனநாயகத்தைப் பாதுகாக்க டெல்லி பேரணி – ராகுல் காந்தி அழைப்பு!

இந்தியாவில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க, நவம்பர் முதலாம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு…

100 0 0
இந்திய செய்திகள்

தேர்தல் முடிவால் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்!

தேர்தல் முடிவால் நடிகர் ரஜினிகாந்த் வருத்தப்பட்டார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், “தனக்கு ஒரு குறை என்னவென்றால், நீண்ட காலமாக கூண்டுக்குள்…

102 0 0
இந்திய செய்திகள்

ஒபரேசன் சிந்தூருக்கு பின் முதன் முறையாக, பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

ஒப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதன்முறையாக, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது. இந்தியத் தலைநகர்…

109 0 0