உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வவுனியா ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
90 பார்வைகள்

வவுனியா மாவட்டம், பிரமனாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள பெரியதம்பனைப் பகுதியில், 40.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகளை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனும், வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களும் இணைந்து நேற்று (31.10.2026) சனிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தனர்.

மழைக்காலங்களில் குறித்த வீதி நீரில் மூழ்கி, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்படும் நிலைமை காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த போக்குவரத்து இடையூறுகளுக்குத் தீர்வுகாணும் வகையில், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் இக்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக 40.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 180 மீற்றர் நீளமான கொங்கிறீட் வீதி, 30 கற்காரைக் குழாய்களைக் கொண்ட ஆற்றுச்சருக்கை மற்றும் நான்கு கற்காரைக் குழாய்களைக் கொண்ட இரண்டு மதகுகள் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நிறைவுசெய்யப்பட்ட இக்கட்டுமானங்களை ஆளுநரும் பிரதியமைச்சரும் நேரில் பார்வையிட்டதுடன், அவற்றைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர். இதன் மூலம் மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த போக்குவரத்துத் தடைக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கௌரவ பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்டப் பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன், நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.ஹதீஸ், ஒப்பந்தகாரர் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற வேலணை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், கல்லூரி தினமும்!

வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரித்தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. கல்லூரியின் சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி மண்டபத்தில், கல்லூரி முதல்வர்…

79 0 0
இலங்கை செய்திகள்

தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காக கடும் காய்ச்சலுடன் மீன்பிடிக்கச் சென்ற மகனை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!!

தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மீன்பிடிக்கச் சென்ற தனது மகனை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து…

68 0 0
இலங்கை செய்திகள்

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர் கால்வாயில் இருந்து சட@லமாக மீட்பு!

பொகந்தலாவை பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், இன்று (31) காலை கால்வாயிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். கெசல்கமுவ ஓயாவுக்கு நீர் செல்லும் கால்வாயிலேயே…

71 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி இன்று இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  பணிக்குழுவினர், பிரதேச…

80 0 0