உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர் கால்வாயில் இருந்து சட@லமாக மீட்பு!
பொகந்தலாவை பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், இன்று (31) காலை கால்வாயிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கெசல்கமுவ ஓயாவுக்கு நீர் செல்லும் கால்வாயிலேயே குறித்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொகந்தலாவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், பொகந்தலாவை சப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (30) இரவு உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, நடந்துசென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் மர்மமான முறையில் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் நேரில் சென்று விசாரணை நடத்திய பின்னர், உடலம் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொகந்தலாவை காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


