உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோலாகலமாக நடைபெற்ற வேலணை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், கல்லூரி தினமும்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
80 பார்வைகள்

வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரித்தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

கல்லூரியின் சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி மண்டபத்தில், கல்லூரி முதல்வர் திருமதி த. சியோதாரணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம விருந்தினராக தர்கா நகர் கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதியும் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் உப செயலாளருமான தனபாலன் தனேந்திரன் கலந்து சிறப்பித்தார்.

விழாவின் ஆரம்ப நிகழ்வாகக் கல்லூரியின் நுழைவாயிலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திலும், கல்லூரி வளாகத்திலுள்ள நடராஜப் பெருமான் சந்நிதியிலும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலைக்கு மலர் மாலை அணிவித்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கல்லூரி மாணவர்களின் மேற்கத்தேய இசைக்குழுவின் வாத்திய இசை முழங்க, விருந்தினர்கள் நுழைவாயிலிலிருந்து கொடியேற்றும் சதுக்கம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசியக் கொடியை பிரதம விருந்தினர் தனபாலன் தனேந்திரனும், கல்லூரிக் கொடியை முதல்வர் திருமதி த. சியோதாரணியும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து விழா மண்டபத்திற்கு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ப. கணேசன் கலந்து சிறப்பித்தார்.

மேலும், கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி செல்வநகர் வித்தியாலய அதிபர் சி. மகேந்திரராசா, லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் தி. மகேந்திரன், வேலணை ஆர்.ஜி. பிரதர்ஸ் ஸ்டோர்ஸ் முகாமையாளர் வி.க. ஐருபன், வேலணை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இ. சிவநாதன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் சு. கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் கல்வி, கலை, கலாசார மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழா, கல்லூரி சமூகத்தினருக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையிலான உறவையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

தொடர்ந்து மாணவர்களின் கல்வி மற்றும் இதர செய்ற்பாடுகளையும் சாதனைகளையும் பாராட்டி கௌரவிக்கும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியா ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைப்பு!

வவுனியா மாவட்டம், பிரமனாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள பெரியதம்பனைப் பகுதியில், 40.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகளை வடக்கு…

90 0 0
இலங்கை செய்திகள்

தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காக கடும் காய்ச்சலுடன் மீன்பிடிக்கச் சென்ற மகனை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!!

தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மீன்பிடிக்கச் சென்ற தனது மகனை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து…

68 0 0
இலங்கை செய்திகள்

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர் கால்வாயில் இருந்து சட@லமாக மீட்பு!

பொகந்தலாவை பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், இன்று (31) காலை கால்வாயிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். கெசல்கமுவ ஓயாவுக்கு நீர் செல்லும் கால்வாயிலேயே…

71 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி இன்று இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  பணிக்குழுவினர், பிரதேச…

80 0 0