திலீபன் விவகாரம் – செல்வராசா கஜேந்திரன் கடும் கண்டனம்
திலீபனின் நினைவாலயக் கட்டுமானங்களை அகற்றுமாறு பொலிஸார் அறிவித்துள்ளமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள உயிர்நீத்த திலீபனின் நினைவாலயத்தில் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு, யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையயிலேயே, இந்த அறிவிப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


