உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘ஜென்ஸி’, ‘மிலேனியம்’ குழுக்களுடன் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டம்!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
88 பார்வைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால மறுசீரமைப்புகள் மற்றும் அரசியல் உத்திகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கட்சிகளின் இணைப்பு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்துவிட்டால் தேர்தலில் இலகுவாக வெற்றிபெற்றுவிடலாம் எனச் சிலர் கணக்குப் போடுகின்றனர். ஆனால், நாட்டில் தற்போதைய அரசியல் கட்டமைப்பு முழுமையாக மாற்றமடைந்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

பழைய பாணியில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதன் மூலம் மாத்திரம் இனிவரும் காலங்களில் வெற்றி பெற முடியாது. நவீன புத்தாக்கங்களையும் புதிய சிந்தனைகளையும் உள்வாங்கி நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.” – என்றார்.

இளம் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான புதிய திட்டங்கள் குறித்து விளக்கிய அவர்,

“மிலேனியம் மற்றும் ஜென்ஸி தலைமுறையினர் இன்றைய நவீன அரசியலில் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாகத் திகழ்கின்றனர். எனவே, இந்த இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் அவர்களை அரசியலில் முன்னிலைப்படுத்தும் வகையிலும் எமது கட்சியில் பாரிய மறுசீரமைப்புகளை மேற்கொள்வது அவசியமாகும்.

இதற்கமைய, ‘ஜென்ஸி ஐக்கிய தேசியக் கட்சி’ மற்றும் ‘மிலேனியம் ஐக்கிய தேசியக் கட்சி’ ஆகிய இரு புதிய அமைப்புக் குழுக்களை உருவாக்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். எமது பாரம்பரிய வாக்காளர்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதோ, அதே அளவுக்கு இந்த இளம் தலைமுறையினரின் வாக்குகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.” – என்று உறுதியாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியா ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைப்பு!

வவுனியா மாவட்டம், பிரமனாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள பெரியதம்பனைப் பகுதியில், 40.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகளை வடக்கு…

85 0 0
இலங்கை செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற வேலணை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், கல்லூரி தினமும்!

வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரித்தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. கல்லூரியின் சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி மண்டபத்தில், கல்லூரி முதல்வர்…

73 0 0
இலங்கை செய்திகள்

தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காக கடும் காய்ச்சலுடன் மீன்பிடிக்கச் சென்ற மகனை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!!

தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மீன்பிடிக்கச் சென்ற தனது மகனை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து…

63 0 0
இலங்கை செய்திகள்

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர் கால்வாயில் இருந்து சட@லமாக மீட்பு!

பொகந்தலாவை பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், இன்று (31) காலை கால்வாயிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். கெசல்கமுவ ஓயாவுக்கு நீர் செல்லும் கால்வாயிலேயே…

68 0 0