உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திலீபனின் நினைவுத் தூபியிலுள்ள தற்காலிக கட்டுமானத்தை அகற்றுங்கள்; யாழ். மாநகர சபைக்கு பொலிஸார் உத்தரவு.!

இலங்கை செய்திகள் 22 மணி நேரம் முன்
93 பார்வைகள்

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியிலுள்ள தற்காலிகக் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவுத் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் அண்மைக்காலமாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரால் யாழ். மாநகர சபையின் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதவது,

“யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை வீதி, றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்துக்கு முன்னால், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவருமான திலீபன் என்பவரை நினைவுகூரும் வகையில், அவரது உருவச்சிலை ஒன்று கண்ணாடி இழைப் பொருளினால் தயாரிக்கப்பட்டு அங்கு நிறுவப்பட்டிருந்தது.

இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை நினைவுகூரும் வகையில், நாட்டின் முக்கிய நகரமொன்றின் பொது இடத்தில் இவ்வாறான நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படுவது, மீண்டும் பொதுமக்கள் மத்தியில் யுத்த மனநிலையை உருவாக்குவதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பெரும் தடையாக அமையும் எனக் கண்டறியப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் JAF/MC1/PC/02317/26-B என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில், 2026.09.27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், திலீபனின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்த காணி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த காணி நல்லூர் கோயிலுக்குச் சொந்தமான காணி என்பதும், அது குத்தகை அடிப்படையில் 2017.10.02ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வழங்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

தற்போது திலீபனின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்த அதே இடத்தில், அவரது புகைப்படத்தை வைத்து தற்காலிகமான மேடை போன்ற அமைப்பு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை நினைவுகூரும் வகையில், இவ்வாறான நினைவுச் சின்னங்களையும் கட்டமைப்புகளையும் பொது இடங்களில் அமைப்பது, மீண்டும் பொதுமக்கள் மத்தியில் யுத்த மனநிலையை ஏற்படுத்துவதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்குப் பெரும் தடையாக அமையும் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிகக் கட்டுமானம் அனுமதியற்ற கட்டுமானம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே, குறித்த காணி மாநகர சபைக்குச் சொந்தமான காணியாக இருப்பதனால், மாநகர சபைச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, அங்கு அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியா ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைப்பு!

வவுனியா மாவட்டம், பிரமனாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள பெரியதம்பனைப் பகுதியில், 40.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகளை வடக்கு…

89 0 0
இலங்கை செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற வேலணை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், கல்லூரி தினமும்!

வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரித்தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. கல்லூரியின் சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி மண்டபத்தில், கல்லூரி முதல்வர்…

79 0 0
இலங்கை செய்திகள்

தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காக கடும் காய்ச்சலுடன் மீன்பிடிக்கச் சென்ற மகனை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!!

தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மீன்பிடிக்கச் சென்ற தனது மகனை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து…

68 0 0
இலங்கை செய்திகள்

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர் கால்வாயில் இருந்து சட@லமாக மீட்பு!

பொகந்தலாவை பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், இன்று (31) காலை கால்வாயிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். கெசல்கமுவ ஓயாவுக்கு நீர் செல்லும் கால்வாயிலேயே…

71 0 0