உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
77 பார்வைகள்

இன ரீதியாக மொழி ரீதியாக நாங்கள் பிரிந்து நின்றது போதும். நாங்கள் ஒன்றிணைந்த இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அழைப்பு விடுத்துள்ளார்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ‘தூய்மையான இலங்கை’ தேசிய திட்டத்தின்கீழ், மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு கூழாவடியில் நடைபெற்றது.

இதன்கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பிரதான வீதியில் விசேட வடிகான் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நடைபெற்றது.

இவ்வேலைத்திட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், புனானை 23 ஆவது படைப்பிரிவின் படைப்பிரிவு தளபதி, மட்டக்களப்பு இலங்கை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி, மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் நா. தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டர்.

இதன்போது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான நிலையில் நீண்டகாலமாக தூய்மைப்படுத்தப்படாமல் இருந்த கூழாவடி பிரதான வீதியின் வடிகான்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

இந்த திட்டத்தின் ஊடாக சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் அதேநேரம் மனங்களிலும் தூய்மையான எண்ணங்களை ஏற்படுத்தும் என நம்புவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீதிகளை சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை.!

புதுக்குடியிருப்பு மேற்கு 04ஆம் வட்டாரம் கிராம அலுவலர் பிரிவில், பிரதேச செயலாளரின் விடுதிக்கு எதிரே உள்ள முதலாம் ஒழுங்கை மற்றும் புதுக்குடியிருப்பு 08ஆம் வட்டாரம், மந்துவிலில் குழந்தையேசு…

60 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஆம் மைல்கல் பகுதியில் சட்டவிரோத மதுபானத்தைக் கார் ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பொலிஸாரால்…

72 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கு நேர்ந்ததே அநுர அரசுக்கும் நடக்கும்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்றே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ந்தெழும் சூழல் உருவாகியுள்ளது என்று…

71 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய மூவர் சிக்கினர்.!

கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பீல்ல பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிபிலை, தெல்கொட மற்றும்…

90 0 0