உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
80 பார்வைகள்

மன்னார் நகரப் பகுதியில் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, குறித்த உணவகத்தில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக, உணவுகள் சுகாதாரமற்ற முறையில் கையாளப்பட்டமை, உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை, அதிகளவான ஈக்கள் காணப்பட்டமை, உணவைக் கையாளும் பணியாளர்கள் கையுறைகள் மற்றும் தலை உறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணியாமை, வடிகால்கள் முறையாகத் துப்புரவு செய்யப்படாமை உள்ளிட்ட பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், காலாவதியான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமையும் ஆய்வின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த உணவகத்திற்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்களின் சுகாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சென் பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்ற விஞ்ஞான – வர்த்தக தினம்.!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாணவர்களின் விஞ்ஞான- வர்த்தக தின நிகழ்வுகள் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11:00 மணியளவில் கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு…

69 0 0
இலங்கை செய்திகள்

பெயர்ப்பலகைகள் தெளிவின்மை; ஊர்களின் பெயர்களை வாசிக்கத் திணறும் பயணிகள்.!

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் நடப்பட்டுள்ள ஊர்களின் பெயர்களைத் தாங்கிய விளம்பரப் பலகைகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், வீதிகளில் பிரயாணம் செய்வோர் இலகுவாக…

75 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு நினைவுகூறல்.!

வடக்கு முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பின் 36 ஆவது வருட நினைவுகூறல் நிகழ்வும், சிறப்பு ஊடகவியலாளர் மாநாடும் இன்று (30)…

82 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படும் பேருந்து நிலையம்; அதிகாரிகள் அசமந்தம்.!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பிரதான பேருந்து நிலையம், தற்போது பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாரிய…

68 0 0