உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு நினைவுகூறல்.!

இலங்கை செய்திகள் 56 நிமிடங்கள் முன்
79 பார்வைகள்

வடக்கு முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பின் 36 ஆவது வருட நினைவுகூறல் நிகழ்வும், சிறப்பு ஊடகவியலாளர் மாநாடும் இன்று (30) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாச்சார சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, இன்று மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நினைவேந்தல் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணப் பிராந்தியத்தைச் சேர்ந்த உலமாக்கள், கல்வியியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், அரசியல் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வடக்கு முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய வரலாற்று ரீதியான கோரிக்கைகள், நியாயமான உரிமைகள் மற்றும் முக்கிய கருத்துக்களை உலகறியப் பதிவுசெய்து செய்தியாக வெளியிடும் பொருட்டு, அனைத்து ஊடக நண்பர்களையும் வழமை போன்று இந்நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளுமாறு யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாச்சார சபையின் செயலாளர் என்.எம். அப்துல்லாஹ் அன்புரிமையுடன் அழைப்பு விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சென் பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்ற விஞ்ஞான – வர்த்தக தினம்.!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாணவர்களின் விஞ்ஞான- வர்த்தக தின நிகழ்வுகள் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11:00 மணியளவில் கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு…

1 0 0
இலங்கை செய்திகள்

பெயர்ப்பலகைகள் தெளிவின்மை; ஊர்களின் பெயர்களை வாசிக்கத் திணறும் பயணிகள்.!

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் நடப்பட்டுள்ள ஊர்களின் பெயர்களைத் தாங்கிய விளம்பரப் பலகைகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், வீதிகளில் பிரயாணம் செய்வோர் இலகுவாக…

67 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

மன்னார் நகரப் பகுதியில் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட…

75 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படும் பேருந்து நிலையம்; அதிகாரிகள் அசமந்தம்.!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பிரதான பேருந்து நிலையம், தற்போது பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாரிய…

64 0 0