உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெயர்ப்பலகைகள் தெளிவின்மை; ஊர்களின் பெயர்களை வாசிக்கத் திணறும் பயணிகள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
74 பார்வைகள்

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் நடப்பட்டுள்ள ஊர்களின் பெயர்களைத் தாங்கிய விளம்பரப் பலகைகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், வீதிகளில் பிரயாணம் செய்வோர் இலகுவாக வாசிப்பதற்கு ஏற்ற வகையில் தெளிவாக இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகள் மற்றும் கரையோரப் பிரதேசங்களை இணைக்கும் முக்கிய வீதிகளில் நடப்பட்டுள்ள பெரும்பாலான பெயர்ப்பலகைகளில் எழுத்துக்கள் மிகவும் சிறியதாகவும், நிறங்கள் மங்கிய நிலையிலும் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி, இரவு வேளைகளில் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் (Reflective) தன்மையற்ற முறையில் இவை அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் ஊர்களின் பெயர்களையும் தூரங்களையும் அடையாளம் காண்பதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாகப் புதிய இடங்களுக்குப் பயணம் செய்யும் வெளியூர் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், ஊர்களின் எல்லைகளையும் பெயர்களையும் சரியாக அடையாளம் காண முடியாமல் வழியறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பெயர்ப்பலகைகள் முறையான பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுவதோடு, சில இடங்களில் வீதியோர மரங்களின் கிளைகளினாலும் புதர்களினாலும் மறைக்கப்பட்டு வாசிக்க முடியாதவாறு காட்சிளிக்கின்றன.

வாகனங்களை அதிவேகமாகச் செலுத்திச் செல்லும்போது தெளிவற்ற பெயர்ப்பலகைகளை உற்றுநோக்க முற்படுவதால் ஓட்டுநர்களின் கவனம் சிதறி விபத்துக்கள் நிகழும் அபாயமும் காணப்படுகின்றது.

எனவே, பிரயாணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, தெளிவற்ற மற்றும் சேதமடைந்த பெயர்ப்பலகைகளை அகற்றிவிட்டு, தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியக்கூடிய வகையிலான புதிய வழிகாட்டிப் பலகைகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டுநர்களும் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சென் பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்ற விஞ்ஞான – வர்த்தக தினம்.!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாணவர்களின் விஞ்ஞான- வர்த்தக தின நிகழ்வுகள் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11:00 மணியளவில் கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு…

67 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

மன்னார் நகரப் பகுதியில் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட…

79 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு நினைவுகூறல்.!

வடக்கு முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பின் 36 ஆவது வருட நினைவுகூறல் நிகழ்வும், சிறப்பு ஊடகவியலாளர் மாநாடும் இன்று (30)…

81 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படும் பேருந்து நிலையம்; அதிகாரிகள் அசமந்தம்.!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பிரதான பேருந்து நிலையம், தற்போது பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாரிய…

67 0 0