உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செய்தியாளரை உருவக்கேலி செய்த ட்ரம்ப்!

உலக செய்திகள் 3 மணி நேரம் முன்
97 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செய்தியாளர் ஒருவரை ‘அருவருப்பானவர்’ எனக் குறிப்பிட்டு, அவரது உடல் தோற்றம் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென் கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வொஷிங்டன் திரும்பியபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, எதிர்வரும் சனிக்கிழமை கன்சாஸ் மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் செனட்டர் ரொஜர் மார்ஷலுக்காக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் ட்ரம்ப் ஏன் பங்கேற்கவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், ரொஜர் மார்ஷல் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாகவும், அதனால் கன்சாஸ் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக காணொளி ஊடான பிரசாரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ட்ரம்பின் குரலில் கரகரப்பு காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய செய்தியாளர், பயணங்களால் ஏற்பட்ட சோர்வு காரணமாகவே அவர் தனது பயணத்தை இரத்துச் செய்தாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், குறித்த கேள்வியைக் கேட்பதே தவறானது எனக் கூறியதுடன், செய்தியாளரை ‘அருவருப்பானவர்’ என்றும், உடல் தகுதியற்றவர் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், “உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் மிகவும் மோசமாகத் தோற்றமளிக்கிறீர்கள்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பு!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை 4.3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப்…

87 0 0
உலக செய்திகள்

போஸ்னியாவில் உலங்கு வானூர்தி விபத்து – 4 படை வீரர்கள் உயி@ரிழப்பு

போஸ்னியாவின் வடக்குப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 4 படை வீரர்கள் உயிரிழந்ததுடன் மேலும்…

92 0 0
உலக செய்திகள்

யூத-அரபு கூட்டணி ஆட்சி அமைக்க வலியுறுத்தி இஸ்ரேலிய இடதுசாரி ஆர்வலர்கள் போராட்டம்!

இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவரும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முக்கிய அரசியல் போட்டியாளருமான காடி ஐசென்காட்டின் (Gadi Eisenkot) வீட்டிற்கு வெளியே இடதுசாரி ஆர்வலர்கள் திரண்டு தீவிரப் போராட்டத்தில்…

91 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! ஆட்சியைத் தக்கவைக்கிறாரா நெதன்யாகு?

இஸ்ரேல் தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் தெளிவான வெற்றி கிடைக்காத நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து இடைக்காலப் பிரதமராகச் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நெதன்யாகு…

91 0 0