உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மகன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
72 பார்வைகள்

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரனின் புதல்வரான நிர்மலகுகன் விக்னேஸ்வரன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்மலகுகன் விக்னேஸ்வரன் எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.

இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடந்த சில வருடங்களாக பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றியிருந்தார்.

இவர் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், கட்டுமானச் சட்டங்களின் நடுவர் மன்றங்கள் உட்பட பல சர்வதேச நடுவர் மன்றங்களில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு காலத்தில், இவர் ஓமான் சுல்தானகத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தில் (2011-14) சட்ட வல்லுநராகப் பணியாற்றினார், அங்கு இவர் பல கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டிருந்தார்.

நிர்மலகுகன் விக்னேஸ்வரன் அமெரிக்காவிலுள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் இராஜதந்திரத்தில் முதுகலை பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும், இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் இணையச் சட்டம் மற்றும் கட்டுமானச் சட்டம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் உள்ளார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களின் பலத்தினால் மட்டுமே இந்த அரசை வீழ்த்த முடியும்.!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான இந்த மக்கள் அரசாங்கம் மக்களின் ஆட்சி என்பதால் மக்களின் பலத்தினாலேயே தவிர வேறு எவராலும் இதனை வீழ்த்த முடியாது என…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.!

இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் 3 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.…

67 0 0
இலங்கை செய்திகள்

யோஷிதவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு.!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு…

65 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ராகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடிவீகும்புர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ராகமை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு-15 பகுதியைச்…

80 0 0