உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போலியான பேயைக் காட்டி பீதியைக் கிளப்பும் எதிர்க்கட்சிகள்.!

இலங்கை செய்திகள் 60 நிமிடங்கள் முன்
75 பார்வைகள்

அரசால் கொண்டுவரப்படவுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ எந்தவொரு வகையிலும் அடக்குமுறைக்காகக் கொண்டுவரப்படவில்லை எனவும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவே எதிர்க்கட்சியினர் இது குறித்துப் போலியான அச்சத்தைப் பரப்பி வருகின்றனர் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் விசேட மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடகச் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன,
“நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறுகிய நோக்கங்களுக்காகத் தங்களது அரசியலை நகர்த்துவோர் எப்போதும் போலியான பேய்களைக் காட்டி நாட்டில் நெருக்கடிகளை உருவாக்கவே முயற்சிக்கின்றனர். தற்போது அவர்கள் ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற விடயத்தைக் கையில் எடுத்துப் பிரச்சாரம் செய்கின்றனர்.

தேசியவாதத்திலோ அல்லது ஏதேனும் ஒரு சட்டத்திலோ தொற்றிக்கொள்ளும் இவர்கள், அதற்கும் வழியில்லை என்றால் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்தாவது அரசாங்கத்தின் மக்கள் சேவைப் பயணத்தைப் பின்னோக்கி இழுக்க முயற்சிக்கின்றனர்.

22 ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதும் எவ்வாறெல்லாம் பீதியைக் கிளப்பினார்கள்? ஆனால், இன்று அதைப் பற்றி எந்தச் சத்தமும் இல்லை. இப்போதும் அதேபோன்றதொரு நாடகத்தையே எதிர்க்கட்சிகள் அரங்கேற்றுகின்றன.” – என்றார்.

அரசின் சர்வதேச அங்கீகாரங்கள் குறித்து மேலும் விளக்கமளித்த அவர்,
“நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊடகங்களை அடக்குவோம், பெரஹரா நடத்துவதை நிறுத்துவோம் எனப் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை முன்வைத்தனர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச தரவரிசைகளின்படி இலங்கை ஊடக சுதந்திரத்தில் முன்பு இருந்ததை விடவும் சிறந்த நிலைக்கு முன்னேறியுள்ளது.

பாலின சமத்துவம், சமூக நீதி என சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து அளவுகோல்களிலும் எமது நாடு உயரிய இடத்தைப் பிடித்துள்ளது. பழைய அரசியல் முறையுடன் ஒப்பிடும்போது ஊடகங்கள் தொடர்பில் நாங்கள் எவ்வளவு ஜனநாயகமாக செயற்பட்டோம் என்பதை ஊடகவியலாளர்கள் நன்கு அறிவர்.

இதுவொரு மக்கள் ஆதரவு பெற்ற அரசாகும். எமது மக்கள் ஆணையின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்பதில் நாங்கள் எந்தவிதத்திலும் பின்வாங்கப் போவதில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களின் பலத்தினால் மட்டுமே இந்த அரசை வீழ்த்த முடியும்.!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான இந்த மக்கள் அரசாங்கம் மக்களின் ஆட்சி என்பதால் மக்களின் பலத்தினாலேயே தவிர வேறு எவராலும் இதனை வீழ்த்த முடியாது என…

72 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.!

இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் 3 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பிலுள்ள தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.…

67 0 0
இலங்கை செய்திகள்

யோஷிதவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு.!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு…

66 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ராகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடிவீகும்புர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ராகமை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு-15 பகுதியைச்…

81 0 0