நடிகை அசினின் மகள் குறித்து வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் ஷர்மாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு 2017ஆம் ஆண்டு அரின் என்ற பெண் குழந்தை பிறந்தார்.
இந்தநிலையில், தனது மகளின் 9ஆவது பிறந்தநாளை அசின் ஜப்பானில் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில், தனது மகளின் கல்வி மற்றும் மொழியறிவு குறித்துப் பேசியுள்ள ராகுல் ஷர்மா, தங்களது வீட்டில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும், புத்தகங்களே அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது மகள் தற்போது இரண்டாம் வகுப்பில் கல்வி கற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், வீட்டில் எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கான புத்தகங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மகளின் கல்வி ஆர்வத்துக்கு அசினே முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரினுக்கு மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் இருப்பதாகவும், கொரியன், ஜப்பானியம், தாய் மற்றும் சீனம் உள்ளிட்ட 12 மொழிகளைப் புரிந்துகொண்டு பேசும் திறன் இருப்பதாகவும் ராகுல் ஷர்மா கூறியுள்ளார்.


