உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் சாரதிகளுக்கு திடீர் போ@தைப்பொருள் பரிசோதனை!

இலங்கை செய்திகள் 51 நிமிடங்கள் முன்
74 பார்வைகள்

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இன்று (29) சாரதிகளை இலக்கு வைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழி காட்டலில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மன்னார் பொலிஸார் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வைத்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துவோரை கண்டறிந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் போதைப்பொருள் பாவனை இன்றி பொறுப்புடன் செயற் படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அரச தனியார் பேருந்து சாரதிகள்,முச்சக்கர வண்டி மற்றும் தனியார் வாகன சாரதிகள், மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் என நூற்றுக்கணக்கானோர் குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்துவோருக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.…

77 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்து சேவையில் பயணிகளுக்கு இடையூறு : பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம்!

முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்துச் சேவையின்போது பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருக்கு ஐந்து நாட்கள் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு…

83 0 0
இலங்கை செய்திகள்

இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளான் இச் சம்பவம் இன்று காலை வட்டவளை லொனக் பகுதியில் இடம் பெற்று உள்ளது. வட்டவளை நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

86 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்தக் கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்டத்தில் பருவ மழையினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைப்பது தொடர்பான அனர்த்த முன்னாயத்த கூட்டம் மாவட்ட அரசாங்க அ சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு…

78 0 0