AI காணொளி விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நடிகை
சமூக வலைதளங்களில் தனது முகத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தவறாகப் பயன்படுத்தி மார்பிங் செய்து பரப்பப்பட்டுவரும் ஆபாசக் காணொளி தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை சுனைனா, அதனை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தனது அனுமதி இன்றி தயாரிக்கப்பட்ட இந்தக் காணொளிக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனவும், இது தனது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கௌரவத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் களங்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய காணொளிகளைத் தயாரிப்பவர்கள், பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர்கள் (Forward/Repost) அனைவரும் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர் என அவர் எச்சரித்துள்ளார்.
இத்தகைய தகவல்களை யாரும் பகிர வேண்டாம் எனவும், சமூக வலைதளங்களில் கண்டால் உடனடியாக அவற்றை அகற்றிவிட்டு புகாரளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


