உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஏமனில் சவுதி வான்வழித் தாக்குதல் : குழந்தைகள் உட்பட 14 பேர் உயி@ரிழப்பு!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

ஹவுதி கட்டுப்பாடில் உள்ள ஏமன் பகுதியில் சவுதி அரேபிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ஆளுகையில் உள்ள ஜாப் (Jawf ) மாகாணத்தில் உள்ள சந்தை மற்றும் பெற்றோல் நிலையம் மீது சவுதி படைகள் நடத்திய வான்வழி டிரோன் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதிக்களின் செய்தி ஊடகமாக அல்மாசிரா தெரிவித்துள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னதாக சவுதி மற்றும் மேற்கத்திய ஆதரவு பெற்ற ஏமன் அரசு செயல்பட்டு வரும் ஏடன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே ஏவுகணை மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அந்த ஏவுகணை விமான நிலையத்தின் உள்ளே உள்ள விமானம் புறப்படும் பகுதியில் விழுந்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே எச்சரிக்கையாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் ஒரு சரக்கு விமானமும் தாக்குதலில் சிக்காத வகையில் டேக் ஆப் ஆகி தப்பியது என அரசின் கீழ் இயங்கும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த விமானத்தில் தாக்குதலுக்கான ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டதால் தாக்குதல் மேற்கொண்டதாகவும், தாக்குதலுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஹவுதி இராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா சாரி தன் டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

2015 இல் ஹவுதிக்கள் தலைநகர் சனாவை கைப்பற்றியதை அடுத்து ஏடன் நகர், அரசின் தற்காலிக தலைநகரமாக செய்லபட்டு வருவதால் அதன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகின்றன.

ஏமன் அரசுக்கு உதவும் சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் ஹவுதி தாக்குதல் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் இழுபறி! ஆட்சியைத் தக்கவைக்கிறாரா நெதன்யாகு?

இஸ்ரேல் தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் தெளிவான வெற்றி கிடைக்காத நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து இடைக்காலப் பிரதமராகச் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நெதன்யாகு…

73 0 0
உலக செய்திகள்

ஸ்பெயினில் அதிவேக தொடருந்து விபத்து : 64 பேர் ப@லி!

மத்திய ஸ்பெயினில் நேற்றைய தினம் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றின் பின்பகுதியில் அதிவேக ரயில் ஒன்று மோதியதில் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64…

82 0 0
உலக செய்திகள்

விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயரிய விருது!

கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி ஃப்ளைதுபாய் (flydubai) விமானத்தின் விமானிகள் அறை (Cockpit) பகுதியில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையின்போது, படுகாயமடைந்த நிலையிலும் சாதுரியமாகச் செயற்பட்டுப் பெரும்…

89 0 0
உலக செய்திகள்

மீண்டும் டொரன்டோ நகர முதல்வரானார் ஒலிவியா சௌ

கனடாவின் டொரண்டோ நகரின் முதல்வருக்கான தேர்தலில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், ஒலிவியா சௌ தனது முதன்மைப் போட்டியாளரான நகர சபை உறுப்பினர் பிராட் பிராட்போர்டை…

92 0 0