உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்தக் கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
77 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பருவ மழையினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைப்பது தொடர்பான அனர்த்த முன்னாயத்த கூட்டம் மாவட்ட அரசாங்க அ சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 30.10.2026நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K.அழகக்கோன் ,மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்கதிபர் காணி அஜிதா பிரதீபன்,பிரதேச செயலாளர்கள் மாவட்டத்திலுள்ள முப்படைகளின் உயரதிகாரிகள் ,மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள்,தொண்டு நிறுவனங்கள் சார்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அனர்த்த முன்னாயத்த நடவடிக்கை தொடர்பாகவும் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் முன்னேற்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது

வடகீழ் பருவமழை எதிர்கொள்ளல் குறித்த மாவட்டச் செயலகக் கலந்தரையாடலின் முக்கிய அம்சங்கள் சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளன:

எஸ்பங்கேற்பாளர்கள்: துறைசார் திணைக்களங்கள, முப்படையினர் மற்றும் பொலிசார் கலந்துகொண்டனர்.
தயார்நிலை: அவசர நிலைகளில் முப்படையினரும் பொலிசாரும் தேவையான உபகரணங்கள், படகுகள் மற்றும் மீட்புப் பணிகளுடன் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அடிப்படை வசதிகள்: மக்கள் இடம்பெயரும் சந்தர்ப்பங்களில் தற்காலிக தங்கமிடங்களில் உணவு, சுகாதார மற்றும் நீர் வசதிகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.
சாலைத் தடைகள்: வீதிகளில் ஏற்படும் தடைகளை விரைவாக அகற்றுவதற்குத் துறைசார் திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்பு கோரப்பட்டது.

அரசுசாரா நிறுவனங்கள்: இக்கட்டத்தில் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கு அரசுசாரா நிறுவனங்களும் சம்மதம் தெரிவித்திருந்தன.

நீர் பாசனம்: மழைக்காலங்களில் குளங்களில் ஏற்படும் மேலதிக நீர் வெளியேற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரித்து நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர் பாசனத் திணைக்களத்தினர் கேட்டுக்கொண்டனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்து சேவையில் பயணிகளுக்கு இடையூறு : பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம்!

முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்துச் சேவையின்போது பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருக்கு ஐந்து நாட்கள் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு…

82 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சாரதிகளுக்கு திடீர் போ@தைப்பொருள் பரிசோதனை!

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இன்று (29) சாரதிகளை இலக்கு வைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின்…

72 0 0
இலங்கை செய்திகள்

இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளான் இச் சம்பவம் இன்று காலை வட்டவளை லொனக் பகுதியில் இடம் பெற்று உள்ளது. வட்டவளை நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

81 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை பிரச்சினைக்கு தீர்வு கோரி எதிர்வரும் 2 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுதல், பண்ணையாளர்கள் மீதான வன்முறைகள் மற்றும் கால்நடைகள் கொல்லப்படுதல்…

85 0 0